Vettri

Breaking News

2024ற்கான மருந்துகள் பட்டியலில் 60% குறைப்பு!!





 சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின்படி, 2024 ஆம் ஆண்டிற்கான கொள்வனவு செய்யக்கூடிய மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஆய்வகத் தேவைகளின் பட்டியல் அறுபது சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி 497 வகையான மருந்துகள், 5301 சத்திரசிகிச்சை கருவிகள் மற்றும் 2219 ஆய்வுகூட உபகரணங்கள் மற்றும் ஏனைய தேவைகள் வழங்கல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் கொழும்பில் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

நீக்கப்பட்ட மருந்துகளில் சில புற்றுநோய் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய குறைந்த விலை மருந்துகள் கூட அடங்கியுள்ளதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இந்த வெட்டு பற்றிய அனைத்து தரவுகளும் மருத்துவ விநியோகப் பிரிவின் சுகாதார தரவு அமைப்பிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எந்தவொரு நிபுணரையும் கலந்தாலோசிக்காமல் ஆய்வகத் தேவைகள் முடிவு செய்யப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments