Vettri

Breaking News

அனைத்து துறையினருக்கும் 20000 ரூபாய் சம்பளம் உயர்வு: விடுக்கப்பட்ட கோரிக்கை




 இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் அரைஅரசு ஊழியர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென தேசிய தொழிலாளர் சபை பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் அரசாங்கத்திற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க நேரிடும் என ஊழியர்களுக்கிடையிலான தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கோரிக்கையை ஏற்க மறக்காதீர்கள். இல்லை என்றால் 13ம் திகதி நாடாளுமன்றத்தின் முன் வருவோம். நாட்டில் உள்ள மற்ற தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்படுவோம்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தோட்ட தொழிலாளர்கள்

அத்தோடு, தோட்ட சேவைகள் சங்கத்தின் பிரதித் தலைவர் எஸ்.சந்திரன் கூறுகையில், இலங்கையில் மிகவும் அநாதரவான நிலைமையில் தோட்டத் தொழிலாளர்களே காணப்படுகின்றனர், அவர்களுக்கு குறைந்தபட்ச கொடுப்பனவாக 2000 ரூபாவை வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.

அனைத்து துறையினருக்கும் 20000 ரூபாய் சம்பளம் உயர்வு: விடுக்கப்பட்ட கோரிக்கை | Salaries Increased For All Departments

இதேவேளை, 20,000 ரூபா கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்குத் தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்வு இன்று (10) பத்தரமுல்லை செத்சிரிபாயவுக்கு முன்பாக வர்த்தக சங்கங்களின் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

No comments