Vettri

Breaking News

கடுமையான மின்னல்: 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது




 நாட்டில் கடும் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடிடும் என 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாயங்கள் மற்றும் ஆரம்ப எச்சரிக்கை மையம் இன்று (06) தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இந்த அசாதாரண சூழலின் போது ஏற்படும் இடி மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும்,முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், மாத்தளை, கண்டி, கம்பஹா, கேகாலை, நுவரெலியா, பதுளை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மொனராகலை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான மின்னல்: 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது | Severe Lightning Red Alert Issued For 20 Districts

மழை மற்றும் இடிமின்னலின் போது மரங்களுக்கு அடியில் மக்களை புகலிட வேண்டாம் என்றும் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எச்சரிக்கையாக இருக்குமாறு

மேலும் இடியுடன் கூடிய மழையின் போது வயல்வெளிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்த பகுதிகளில் இருப்பதை தவிர்க்குமாறும், இடி மின்னல் பொழுதுகளில் தொலைபேசி மற்றும் இணைக்கப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது.

கடுமையான மின்னல்: 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது | Severe Lightning Red Alert Issued For 20 Districts

அதுமாத்திரமல்லாமல், திறந்தவெளி வாகனங்களான சைக்கிள், டிராக்டர், படகு போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து, மரங்கள், மின்கம்பிகள் விழும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

No comments