இராணுவத்தின் பேரில் 2 லட்சம் ரூபா பெறுமதியான அரிசி கொள்ளை
இராணுவ முகாமிற்கு அரிசி தேவை என ஆலை ஒன்றிற்கு போலியான அழைப்பு விடுக்கப்பட்டு இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹொரண கும்புக பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலையொன்றில் இருந்தே இவ்வாறு அரிசி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொம்பகொட இராணுவ முகாமுக்கு அரிசி தேவை என போலி தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவல்நிலையத்தில் முறைபாடு
அதன் பின்னர் அரிசி ஆலையின் லொறி நேற்று(05)மாலை குறித்த முகாமிற்கு அருகில் சென்ற வேளை உரிய தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து சந்தேக நபர்கள் இரண்டு லட்சம் அரிசியை ஹொரண இராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி, லொறி ஒன்றில் வந்து ஏற்றிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இது போலியான அழைப்பு என்பதை தெரிந்துகொண்ட ஆலை உரிமைாளர்கள் காவல்நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, சந்தேக நபர்களின் லொறியின் இலக்கத்தை வைத்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அந்த லொறி கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.
மேலும், தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் சந்தேகநபர்களை கைது செய்ய அகுரேவாதொட்ட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments