Vettri

Breaking News

15 வருடங்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூவர்!!





2006ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவர் 15 வருட சிறைவாசத்தின் பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2006ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கொள்ளுப்பட்டியில் அப்போதைய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் வாகனத் தொடரணியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் விடுதலைப் புலிகளின் மூன்று உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன், வழக்கின் சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவர்களை விடுவித்து இன்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

No comments