Vettri

Breaking News

யாழில் அதிகாலையில் நடந்த பாரிய கொள்ளை : 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டு!




 யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இன்று (05) வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் காவல்துறைப்  பிரிவிற்குட்பட்ட,  இணுவில் - மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் இன்று அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறையினர் விசாரணை

இன்று அதிகாலை மூன்று மணியளவில் சமையல் வேலைக்காக எழுந்த குடும்பத்தினர் கையடக்க தொலைபேசியைக் காணாது தேடிய பொழுது அலுமாரி மற்றும் கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

யாழில் அதிகாலையில் நடந்த பாரிய கொள்ளை : 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டு! | 135 Pounds Worth Of Gold Jewelery Has Been Stolen

பின்னர் நகைகளைப் பார்த்த போதே நகைகள் திருட்டுப் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை அந்தக் குடும்பத்துடன் தொடர்புடைய யாரோ அல்லது இரகசியமாக நுழைந்த யாரோ திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் கோப்பாய் காவல்துறையினர் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments