Vettri

Breaking News

யாழ்ப்பாணத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த மரம் முறிந்து விழுந்தது




 யாழ்ப்பாண நகரில் நின்ற நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக நேற்று வியாழக்கிழமை (16)  முறிந்து விழுந்தது.

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே முறிந்து விழுந்துள்ளது.

பாடசாலை முன்னால் இருந்த நிலையில் மரம் வீதிக்கு குறுக்காக விழாது வெற்றுக் காணிக்குள் விழுந்ததால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதியோரமாக உள்ள மரங்கள் முறிந்து விழுகின்ற நிலையில் இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்துவது பாரிய அசம்பாவிதங்களை தவிர்க்கும்.

No comments