Vettri

Breaking News

முக்கிய இடத்தில் நம்பர் 1 இடத்தை பிடித்த லியோ.. இரண்டாம் இடத்திற்கு சென்ற ஜெயிலர்




 

லியோ வசூல்

இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது விஜய்யின் லியோ.

பல இடங்களில் இதற்குமுன் மற்ற நடிகர்களின் படங்கள் செய்த வசூல் சாதனையை லியோ படம் முறியடித்து வருகிறது. நேற்று Gulf Countries-ல் ஜெயிலர் படத்தை விட அதிக வசூல் செய்து, அங்கு நம்பர் 1 இடத்தை பிடித்தது.

முக்கிய இடத்தில் நம்பர் 1 இடத்தை பிடித்த லியோ.. இரண்டாம் இடத்திற்கு சென்ற ஜெயிலர் | Leo Beats Jailer In Kerala

நம்பர் 1 இடத்தில் லியோ 

இதை தொடர்ந்து விஜய்யின் கோட்டை என கூறப்படும் கேரளாவிலும் புதிய வசூல் சாதனையை லியோ படைத்துள்ளது. ஆம், கேரளாவில் லியோ திரைப்படம் இதுவரை ரூ. 57.8 கோடி வரை வசூல் செய்துள்ளது.

முக்கிய இடத்தில் நம்பர் 1 இடத்தை பிடித்த லியோ.. இரண்டாம் இடத்திற்கு சென்ற ஜெயிலர் | Leo Beats Jailer In Kerala

இதன்மூலம் ஜெயிலர் படத்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதலிடத்தை லியோ பிடித்துள்ளது. ஏனென்றால் ஜெயிலர் படம் கேரளாவில் ரூ. 57.4 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது.

ஆனால், தற்போது லியோ ரூ. 57.8 கோடி வசூல் செய்து ஜெயிலர் வசூலை பின்னுக்கு தள்ளியது மட்டுமின்றி கேரளாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments