Vettri

Breaking News

பிரமிட் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை 05 பேருக்கு 16 வரை விளக்கமறியல்




 

பிரமிட் திட்டங்களில் சட்டவிரோதமான முறையில் பண பரிவர்த்தனை செய்ததாக இலங்கை மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்ட “Onmax DT” தனியார் நிறுவனத்தின் ஐந்து பணிப்பாளர்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (03) உத்தரவிட்டுள்ளார்.

இந்திக சம்பத், கயாஷான் அபயரத்ன, சம்பத் சந்தருவன் சாரங்க ரந்தீப மற்றும் தனஞ்சய ஜெயன் ஆகியோர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

No comments