காசாவின் வடக்கில் இஸ்ரேலிய படையினருடன் ஹமாஸ் மோதல்!!
காசாவின் வடபகுதியில் இஸ்ரேலிய படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. வடகாசாவில் உள்ள பெய்ட் ஹனோன் காசாவின் மத்தியில் உள்ள புரேஜ் போன்ற பகுதிகளில் மோதல்கள் இடம்பெறுவதாக ஹமாசின் இராணுவபிரிவிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை காசாவில் ஹமாசை இலக்குவைத்து தனது நடவடிக்கைகள விஸ்தரித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசா மக்களை தென்பகுதி நோக்கி செல்லுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.
தொலைத்தொடர்புகள் செயல்இழந்துள்ளதால் பொதுமக்களை தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள பிபிசி இஸ்ரேல் விமானங்கள் தொடர்ந்தும் தாக்குதல்களில் ஈடுபடுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளது இதேவேளை தங்களின் படையினரும் டாங்கிகளும் காசா பள்ளத்தாக்கிற்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேலிய பேச்சாளர் ஒருவர் நியுயோர்க் டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.
No comments