மாத்தறையில் வீட்டுப்பணிப்பெண்கள் இருவர் கொலை !
மாத்தறை பிரதேசத்தில் உள்ள வீட்டொன்றில் பணிபுரிந்த வீட்டுப்பணிப்பெண்கள் இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய துடாவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
67 மற்றும் 70 வயதுடைய வீட்டுப் பணிப்பெண்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது, வீட்டின் உரிமையாளர் வீட்டிலிருந்து வெளியேறி மீண்டும் வீடு திரும்பிய போது, பணிப்பெண்கள் இருவரும் இல்லாததை அவதானித்து அயலவரக்ளுடன் இணைந்து இரு பெண்களையும் தேடியுள்ளனர்.
பின்னர், இரண்டு பெண்களின் சடலங்களம் அவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் குளியலறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டில் இருந்த 12 தங்க வளையல்கள், 2 தங்க நெக்லஸ்கள், ஒரு தங்க கரண்டி, 39 வெளிநாட்டு நாணயங்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments