இலங்கை வந்து குவியும் சுற்றுலாப்பயணிகள்: பில்லியன் கணக்கில் வருமானம்
இலங்கை மத்திய வங்கியின் அண்மைய தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சுற்றுலா வருமானம் 1.45 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இது சென்ற ஆண்டின் (2022) இதே காலகட்டத்தை விட வியத்தகு 67% உயர்வடைந்த தொகையாக கூறப்படுகிறது.
அதிகளவு வருமானம்
இருந்தபோதிலும், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதாந்திலும் சுற்றுலாத்துறை ஈட்டிய வருமானம் எதிர்பார்த்த இலக்கை விட குறைவாக பதிவாகியுள்ளது.
செப்டம்பர் மாத வருவாய் 152.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது சென்ற ஆண்டின் வருவாயில் 28% சரிவைக் காண்பிப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஒன்பது மாதங்களிலும் அதிகளவு வருமானத்தை ஈட்டிய மாதமாக ஜூலை மாதம் காணப்படுகிறது, 219 மில்லியன் அமெரிக்க டொடாலர்களாக பதிவாகியுள்ளது.
இதுவே இந்த ஆண்டின் இதுவரையில் எட்டப்பட்ட மாத வருமானங்களில் அதிக வருமானமாகவுள்ளது.
1.55 மில்லியன் பார்வையாளர்களை வரவழைத்து ஆண்டு இறுதிக்குள் 3 பில்லியன் அமெரிக்க டொடாலர்களுக்கு மேல் வருமானத்தை ஈட்டுவதை இலங்கை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் எதிர்வரும் குளிர்காலத்தில் இலங்கை சுற்றுலாத்துறை அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டு செயலாற்றி வருகிறது.
2023 இன் முதல் ஒன்பது மாதங்களில் 1.01 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments