பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றும் வேலைநிறுத்தம் !
அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்(PHI) ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் இன்று(31) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
போக்குவரத்து கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.போபிட்டிய தெரிவித்துள்ளார்.
தாம் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் உரிய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு தலையீடும் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments