Vettri

Breaking News

நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!




 மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலை ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர்  தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (25.10.2023) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பிரேத பரிசோதனை

இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை அவதானித்ததைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் அவ்விடத்திற்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் நீதிபதியின் முன்னிலையில் சடலம் நீர் நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

 சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிபதி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு | Batticalo Recovery Of Body Of A Man From Water

மேலதிக விசாரணை

இந்நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் போரதீவுப்பற்றுப் பிரதேச செலயகத்திற்குட்பட்ட பொறுகாமம் சமூர்த்தி வங்கியில் கடமைபுரியும் பெரியகல்லாற்றைச் சேர்ந்த நிலக்சன் என காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் இச்சம்பவம் குறித்து களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   

No comments