இலங்கையில் அதிகரித்த தயிரின் விலை
இலங்கையில் தயிர்ச்சட்டி ஒன்றின் விலை 500 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தேசிய வாடிக்கையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போது உற்பத்தி செய்யப்படும் பாலின் விலை குறைவடைந்துள்ளதாலேயே தயிர்ச்சட்டியின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி
மேலும், உலகில் அதிகளவில் பால் மாவை பயன்படுத்தும் ஐந்து நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதேவேளை இலங்கைக்கு தேவையான பாலில் 40 வீதம் மாத்திரமே உள்நாட்டிலிருந்து பெறப்படுவதோடு மீதமுள்ள 60 வீதமானது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அண்மையில் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பீ. ஹேரத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments