கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இளைஞர் தாக்கப்பட்டுக் கொலை!
கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து 24 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்ரீ குணானந்த மாவத்தையில் நேற்று திங்கட்கிழமை (09) இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட இளைஞர் தனது தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் ஸ்ரீ குணானந்த மாவத்தை பகுதியில் வசித்து வந்துள்ளார்.
சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments