Vettri

Breaking News

துப்பாக்கி சூட்டு காயத்துடன் இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதி...




 இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேலதிக விசாரணை



முல்லைத்தீவு நாயாறு பகுதியிலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தவறுதலாக இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காலில் சிறு காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments