Vettri

Breaking News

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த இளையோருக்கு ஹரிஹரன் நிகழ்ச்சியில் நடனமாட வாய்ப்பு!




 எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் தலைமையிலான இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது.

இந்த இசைநிகழ்வில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த இளையோருக்கும் வாய்ப்பு வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி வடக்கு ,கிழக்கைச் சேர்ந்த நடனத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பித்து அவர்களுக்கான போட்டி இடம்பெறும்.

யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிஹரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வடக்கு கிழக்கு இளையோருக்கு அரிய வாய்ப்பு | Rare Opportunity For North East Youth

அதில் சிறந்த போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு பாடகர் ஹரிஹரன் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என தென்னிந்திய நடன இயக்குநர் கலாமாஸ்ரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0776974761, மற்றும் 0767199789 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்  

No comments