காசாவில் உணவு பொருட்கள் பற்றாக்குறை : உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள தகவல்!
காசா பகுதிக்கான உணவுப் பொருட்கள் போதுமானதாக இல்லை என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உதவிகளை ஏற்றிச் செல்லும் மேலும் 40 கொள்கலன்கள் காசா பகுதிக்குள் பிரவேசிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் உலக உணவுத்திட்டம் மேலும் குறிப்பிடுகையில்,
“காசா பகுதியில் உள்ள ஒரு மில்லியன் மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க சுமார் 40 கொள்கலன்களில் உதவி தேவையாக உள்ளது.
மேலும், காசாவில் உள்ள 2 மில்லியன் மக்களுக்கு உணவை வழங்குவதற்கு நாளொன்றுக்கு சுமார் 100 கொள்கலன்கள் அவசியமாகும்.” என சுட்டிக்காட்டியுள்ளது
No comments