Vettri

Breaking News

ஐஸ் போதைப்பொருளுடன் ஹட்டனில் பணிபுரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் மொரட்டுவையில் கைது!




 ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்  மொரட்டுவையில் வைத்து  பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தலைமையக பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஹட்டன் தலைமையக பொலிஸில் கடமையாற்றும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளாவார்.  

சந்தேக நபரான   இந்த புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் 21 வயதுடைய ஹொரணையை வசிப்பிடமாகக் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



இந்த பயிலுனரான கான்ஸ்டபிள் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments