காட்டுப் பன்றிகளை வேட்டையாடச் சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (09) காட்டுப் பன்றிகளை வேட்டையாடச் சென்ற ஒருவர் மின்சார கம்பிகளில் சிக்கிக்கொண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய பதுரலிய பிரதேசத்தின் கலகங்கொட பெலட அகலவத்தை பகுதியை சேர்ந்த காரியவசம் மணராச்சிகே விதுரங்க கயஷான் என்ற நபர் ஆவார்.
குறித்த நபர் தனது பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்தில் உள்ள வயல்வெளியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார்.
அங்கு சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின் கம்பிகளை அகற்ற முற்பட்டபோது மின்சார கம்பிகளில் சிக்கிக்கொண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.
No comments