உயர்தரப் பரீட்சையில் உச்ச பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி மக்கள் வங்கி கௌரவிப்பு
022 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர் தரப் பரீட்சையில், அனைத்து பாட பிரிவுகளிலும் உச்ச ஸ்தானங்களைப் பெற்ற மிகச்சிறந்த மாணவர்களின் சாதனைகளை மக்கள் வங்கி பெருமையுடன் கொண்டாடியுள்ளது.
மாணவர்களின் கடின உழைப்பைக் கௌரவப்படுத்தும் அடையாளமாக, வங்கி இந்த உச்ச சாதனை படைத்த ஒவ்வொருவருக்கும் புத்தம் புதிய மடிகணினியை வழங்கியது.
மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ மற்றும் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா ஆகியோரின் தலைமையில் கொழும்பு 05 இல் உள்ள மக்கள் வங்கி பணியாளர்கள் பயிற்சிக் கல்லூரியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மக்கள் வங்கியானது தத்தமது துறைகளில் சிறந்து விளங்கிய பின்வரும் மாணவர்களை அங்கீகரித்து, கௌரவித்துள்ளது: உயிரியலில் முதலாம் இடத்தைப் பெற்ற மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த பிரமுதி பாஷினி முனசிங்க.
பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ள கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த மனேத் பானுலா, வர்த்தகப் பிரிவிற்கு கொழும்பு, சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த தில்சரணி தருஷிகா, கலைப் பிரிவில் அகில இலங்கையில் முதலிடம் பெற்ற கேகாலை புனித சூசையப்பர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சசினி சத்சரணி அதிபத்து, பொறியியல் தொழிநுட்ப பிரிவில் உச்ச ஸ்தானத்தைப் பெற்ற காலி ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த சமுதித நயனப்ரிய மற்றும் உயிர்முறைமைகள் தொழினுட்பவியலில் நாட்டில் முதல் இடத்தைப் பெற்ற கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ருச்சினி அஹின்சா விக்ரமரத்ன.
இவ்விழாவில் உரையாற்றிய மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ அவர்கள், “இந்த அசாத்தியமான திறமைசாலிகளை அங்கீகரித்து அவர்களுக்கு வெகுமதி வழங்கும் பாக்கியத்தை மக்கள் வங்கி பெற்றிருப்பதில் பெருமையடைகிறது. இந்த முயற்சி நமது தேசத்தின் எதிர்கால தலைவர்களை வளர்ப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும் எமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது,” என்று குறிப்பிட்டதுடன், மாணவர்களின் சிறப்பான திறமைகளை எதிர்காலத்தில் நாட்டுக்கு சேவை செய்ய பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பிரதி பொது முகாமையாளர் (வங்கி ஆதரவு சேவைகள்) நிபுனிகா விஜயரத்ன ரி.எம்.டபிள்யூ. சந்திரகுமார, பிரதிப் பொது முகாமையாளர் (வழங்கல் முகாமைத்துவம்), சந்தைப்படுத்தல் தலைவர் நாலக விஜயவர்தன, மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (தனிநபர் வங்கிச்சேவை) நளின் பத்திரனகே, மற்றும் பாடசாலை அதிபர்கள், மக்கள் வங்கியின் நிறைவேற்று முகாமைத்துவ அதிகாரிகள், பிராந்திய முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள், மற்றும் பெற்றோர்கள் உட்பட பெருமதிப்பிற்குரிய அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
No comments