மயிலத்தமடு மேய்ச்சற்தரை விவகாரம் ஜனாதிபதியுடன் பண்ணையாளர்கள் நேரடி பேச்சுக்கு ஏற்பாடு...
மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரை விவகாரம் தொடர்பில் பண்ணையாளர்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவரும், ரணில் 2024 செயலணித் தலைவருமாகிய கணபதிப்பிள்ளை மோகன் அவர்களின் ஏற்பாட்டில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 8ம் திகதி ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தை ஒட்டியதாக மையிலத்தமடு பண்ணையாளர் சங்க தலைவர் சீ.தியாகராசா செயலாளர் பா.பரசுராமன் மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தரணி பேராசிரியர் த. ஜெயசிங்கம் அடங்கிய குழுவினர் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக க.மோகன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments