யாழில் பணியாற்றும் பெண் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் விடுமுறைக்காக வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்றைய தினம் (10) இடம்பெற்ற விபத்தில் சிக்கி 24 வயதான சாந்திமா ரணசிங்க என்ற பெண் காவல்துறை அதிகாரியே உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி
அம்பேபூச - திருகோணமலை வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் என்பன மோதுண்ட நிலையிலேயே விபத்து சம்பவித்துள்ளது.
படுகாயம் அடைந்த யுவதி வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை காவல் நிலையத்தில் சமூக காவல் பிரிவில் கடமையாற்றி வந்த தம்புள்ளையைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
No comments