புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்.
அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று (26) ஆரம்பமாகியுள்ளது .
நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் லசிக சமரகோன் குறிப்பிட்டுள்ளார் .
இன்று முதல் வரும் 31ம் திகதி வரை விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் பாடசாலை பருவப் பரீட்சைகள் நடைபெறவுள்ளதால் புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் லசிக சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றதுடன் அதில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 3,37,596 ஆகும்.
No comments