Vettri

Breaking News

மின்சாரம் மற்றும் நீர்க்கட்டணம் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு




 மின்சாரக் கட்டணத்துடன் நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகத்திற்கு அதிகளவில் மின்சாரம் பயன்படுத்தப்படுவதால், இழப்பை ஈடுகட்ட குடிநீர்க் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நீர்க்கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் சபைக்கு நஷ்டம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சாரக் கட்டணம் அதிகரித்தால் நஷ்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் குறிப்பிட்ட சதவீதத்தினால் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments