Vettri

Breaking News

கார்த்திக்கு வில்லனாகும் சத்யராஜ்




 பொக்ஸ் ஒபிஸ் சுப்பர் ஸ்டார் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக 'புரட்சித் தமிழன்' சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகையான கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் முக்கியமான வில்லன் வேடத்தில் 'புரட்சித் தமிழன்' சத்யராஜ் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ரசிகராக நடிக்கிறார் என்றும், அவருக்கு வில்லனாக எம்ஜிஆரின் தீவிர ரசிகரான சத்யராஜ் நடிக்கிறார் என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளி வெளியிடாக வெளியாகிறது என்பதும், இதில் நடிகர் கார்த்தி தங்க நகைகளை கொள்ளை அடிக்கும் கும்பலின் தலைவனாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments