குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தாய் மீது பாலியல் துஷ்பிரயோகம்!
பூகொடை பிரதேசத்தில் வீடொன்றில் தனது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவரை மூன்று இளைஞர்கள் குழந்தையை தாக்குவதாக அச்சுறுத்தி தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பூகொடை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் தாய் வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைமறைவாக உள்ள மற்றுமொறு சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
No comments