Vettri

Breaking News

வாகன விபத்தில் விசேட அதிரடிப்படை வீரர்கள் இருவர் பலி!




 வவுனியா – வெளிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை(STF) கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளதோடு, 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (09) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வண்டி ஒன்று வெளிக்குளம் பகுதியில் பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments