Vettri

Breaking News

கனடாவில் வேலைவாய்ப்பு : இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில் கைது!




 கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் இம்ரான் கான் (வயது39) என்ற சந்தேக நபரே இந்திய தேசிய புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்டகாலமாக மோசடியில்

தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் நீண்டகாலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கனடாவில் வேலைவாய்ப்பு : இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில் கைது | Kidnapping Mastermind Arrested In India

இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு தொடக்கம் இவரைக் கைது செய்ய இந்திய பாதுகாப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

ஏற்கனவே ஐவர் கைது

இலங்கையிலிருந்து தமிழ்நாடு மற்றும் பெங்களூரு வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு ஆட்களை அழைத்து வந்துள்ளதை இந்திய பாதுகாப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

கனடாவில் வேலைவாய்ப்பு : இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில் கைது | Kidnapping Mastermind Arrested In India

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 5 இந்திய நாட்டவர்கள் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் முன்னர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments