மதவாச்சியில் முதலை மீட்பு !
அநுராதபுர வனவிலங்கு குழுவினர் இன்று காலை மதவாச்சி வரக்காவ பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்த பாரிய முதலையை 3 மணித்தியால நடவடிக்கையின் பின்னர் மீட்டுள்ளனர்.
10 அடி நீளமும், சுமார் 300 கிலோ எடையும் கொண்ட இந்த முதலை அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் உள்ள விவசாய கிணற்றில் சில நாட்களாக கிடந்தது.
வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 3 மணித்தியால நடவடிக்கைக்கு பின் இந்த முதலையை பெரும் முயற்சியுடன் காப்பாற்றியுள்ளனர்.
மீட்கப்பட்ட முதலை வில்பத்து தேசிய பூங்காவில் விடுவிக்கப்படவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments