மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் - முச்சக்கர வண்டி மோதி விபத்து : இருவர் பலி!
கட்டுநாயக்கா, ஆடியம்பலம் பகுதியில் நேற்று (22) இரவு பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பஸ் தெஹிவளையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மட்டக்களப்புக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments