வவுனியாவில் ரயிலால் மோதப்பட்டு இரு காட்டு யானைகள் பலி!
வவுனியா - செட்டிக்குளம் பிரதேசத்தில் ரயிலால் மோதப்பட்டு இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
15 மற்றும் 20 வயதுடைய காட்டு யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்தில் சமீப காலமாக பெரும்பாலான காட்டு யானைகள் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வருடம் மாத்திரம் சுமார் 191 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் யானைகள் பாதுகாப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments