லாப்ஸ் எரிவாயுவின் விலையிலும் மாற்றம்: வெளியான அறிவிப்பு..
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கபட்டுள்ள நிலையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் இன்று(4) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1595 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 3985 ரூபாய் புதிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments