Vettri

Breaking News

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம். : ஹரீஸ், அதாஉல்லா கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்..




அதிகமான கடலரிப்பை சந்தித்துள்ள அம்பாரை மாவட்டம், சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் (19/09/2023) அன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சாய்ந்தமருது கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கான ஆரம்ப கட்ட வேலைகள் இன்று செவ்வாய்க்கிழமை (03/10/2023) ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக் அவர்களின் நேறிப்படுத்தலில் கரையோரம் பேணல் திணைக்கள மாகாண பொறியியலாளர் எம். துளசி தாசனின் அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். 55 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் வேலைகளை தொடங்கி வைத்த இந்நிகழ்வில் சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ. எல். எம். சலீம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே. கே. எம். அர்சத் காரியப்பர், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக கிராம நிலதாரி ஏ.எம்.ஏ. நளீர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. நிஷார்தீன், சாய்ந்தமருது பிரதேச செயலக கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள், சாய்ந்தமருது பிரதேச முக்கியஸ்தர்கள், மீனவ சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



No comments