Vettri

Breaking News

தமிழரசு கட்சியின் மட்டக்களப்பின் சொத்து மறைந்துவிட்டது - இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தரும் , கட்சியின் பிரதேச செயலாளருமான க. செல்வபிரகாஷ் அனுதாபம் தெரிவிக்கையில் ....




 மட்டக்களப்பு மாவட்ட முன்னையனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களிலும் ஒருவருமாகிய திரு.செல்வராஜா  ஐயா அவர்களின் மறைவை இட்டு...

 தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தரும் , கட்சியின் பிரதேச செயலாளருமான

 க. செல்வபிரகாஷ்  அனுதாபம் தெரிவிக்கையில்.....



மிக நீண்ட அரசியல் பரம்பரையிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியத்தின்பால் நாடாளுமன்றம் சென்று, கடந்த யுத்த காலத்திலே மட்டு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத சக்திகளால் நடைபெற்ற ஈன செயல்களுக்கு எதிராக பாராளுமன்றத்திலே மிகப்பெரும் குரல் கொடுத்து, பல சக்திகளால் எதிர்வலைகளையும் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வரலாற்றை கொண்டவர் செல்வராஜா ஐயா அவர்கள்.

சிறந்த ஒரு கட்சியின் பேச்சாளரும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக பல ஆண்டு காலத்துக்கு முன்பு பாராளுமன்றத்திலே மிக சிறப்பான குரலை தமிழ் மக்களின்பால் ஒலிக்க செய்தவர் அதுமட்டுமின்றி எங்களுடைய அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற பல செயல்களையும் பாராளுமன்றத்திலே கொண்டு வந்தவர்களுள் திரு.செல்வராஜா ஐயா அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னார் அவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் மிக நீண்ட ஒரு பலமாக கிழக்கு மாகாணத்திலே உதித்து கொண்டு இருந்தவர். யுத்த காலத்திலே ஒரு அஞ்சாத நெஞ்சம் கொண்ட தமிழராக  உண்மைகளை பாராளுமன்றத்திலே உரத்து கூறியவர்களில் திரு. செல்வராஜா ஐயா அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே திரு. செல்வராஜா ஐயா அவர்களின் இழப்பு என்பது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மட்டும் அல்ல கிழக்கு மாகாணத்துக்கே பேரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.



No comments