நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்!
இந்தி திரையுலகின் நட்சத்திர நடிகரான ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
’பதான்’, ‘ஜவான்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகர் ஷாருக்கான், மகாராஷ்டிர அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து ஷாருக்கானுக்கு பாதுகாப்பை பலப்படுத்த மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மும்பை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இனி அவருடன் ஆறு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் எந்நேரமும் இருப்பார்கள். இதுதவிர அவரது வீட்டைச் சுற்றி ஆயுதம் ஏந்திய நான்கு பொலிஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
No comments