Vettri

Breaking News

Bigg Boss 7 Exclusive: வெளியேறினார் பவா செல்லத்துரை! புது கேப்டனின் அந்த விமர்சனம்தான் காரணமா?




 பவா செல்லத்துரை

விஜய் டிவியின் ஹிட் ஷோவான பிக்பொஸ் தமிழின் சீசன் 7 கடந்த அக்டோபர் முதல் திகதி தொடங்கியது. இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக இரண்டு வீடுகள். ஒவ்வொரு வாரமும் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கான நொமினேஷன் பட்டியலில் இடம்பிடிப்பவர்கள் இரண்டாவது வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

அனன்யா ராவ்

அனன்யா ராவ்

முதல் எவிக்‌ஷன் நேற்று நிகழ்ந்தது. அனன்யா எலிமினேட்டாகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் பார்த்தால் யுகேந்திரனே மிகக் குறைந்த ஓட்டுகள் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது. அதற்கடுத்த இடங்களில் பவா செல்லத்துரையும் அனன்யாவும் இருந்த நிலையில் யுகேந்திரன், பவாவைத் தாண்டி அனன்யா வெளியேறியது கடைசி நிமிட அதிரடி என்றார்கள்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத இன்னொரு சம்பவமும் ஞாயிற்றுக் கிழமையான நேற்று பிக்பொஸ் வீட்டில் நடந்துள்ளது.

ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் தன் கருத்தைச் சொல்லி வந்த சரவணன், பவா செல்லத்துரை குறித்துக் குறிப்பிடும் போது ‘சோம்பேறி’ எனக் குறிப்பிட்டார் .

பிக் பாஸ் தமிழ் – சீசன் 7 | சரவணன்

அதுமட்டுமின்றி, தொடர்ந்து இந்த வாரமும் பவா செல்லத்துரை இரண்டாம் வீட்டிலேயே இருக்கிற மாதிரியான சூழல்தான் உருவானது .

எனவே, அதிருப்தியடைந்த பவா, “இந்த வீட்டில் என்னால் சில டாஸ்குகளைச் செய்ய இயலாது. இந்த வீட்டுக்கு நான் வரும் போது சூழ்ச்சிகள், சதிகள் எல்லாம் இருக்குமெனத் தெரிந்துதான் வந்தேன். ஆனால் இங்குக் கூடுதலாக வன்மமும் அதிகமாக இருக்கிறது. எனவே தொடர்ந்து இங்கு இருந்து டாஸ்குகளைச் செய்ய என் உடலும் ஒத்துழைக்காது. எனவே நான் வெளியேறி விடுகிறேன்” எனச் சொல்லி, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விட்டாராம்.

ஜோவிகா

ஜோவிகா

உச்சமாக நடிகை வனிதா விஜய்குமாரின் மகள் ஜோவிகா ’படிச்சா மட்டும்தான் வாழ முடியுமா’ எனக் கேட்ட போது அவர் கருத்துக்கு ஆதரவாக இவர் பேசியது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ‘ஓர் எழுத்தாளர் இப்படிப் பேசலாமா’ என்றார்கள். அதே ஜோவிகாவை இவர் பாராட்டிக் கை குலுக்கச் செல்ல, அவர் இவரது வயதைக் கூடப் பொருட்படுத்தாமல் பதில் மரியாதைத் தராமல், அதாவது கை கொடுக்காமலேயே அலட்சியமாகச் சென்றுவிட்டதும் நடந்தது.

தொடர்ந்து நடந்த இது மாதிரியான சம்பவங்களின் காரணமாகவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.

No comments