Vettri

Breaking News

3 மாவட்டங்களுக்கான மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை நீடிப்பு !







 தொடரும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

காலி மாவட்டத்தின் யக்கமுல்ல, எல்பிட்டிய, நாகொட, இமதுவ, காலி கடவத் சதர பிரதேச செயலக பிரிவுகள் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வலல்லாவிட்ட, மத்துகம பிரதேச செயலக பிரிவுகள் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, ஹக்மன ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பதுளை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments