Vettri

Breaking News

2013 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட 49 சொகுசுப்பேருந்துகள் செயலிழப்பு




 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட 49 சொகுசுப் பேருந்துகள் தற்போது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளின் நலனுக்காக இந்த சொகுசுப் பேருந்துகளை இறக்குமதி செய்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

மாநாட்டின் பின்னர் இந்தப் பேருந்துகளை இலங்கையின் தென் பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையின் பொதுப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

உதிரிப் பாகங்கள் இன்மை

இதன் வாயிலாக நாளொன்றுக்கு 80,000 ரூபா முதல் 90,000 ரூபா வரையில் அரசாங்கம் வருவாய் ஈட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறிருக்கையில் அவற்றை பராமரிப்பதற்கும் பழுது பார்ப்பதற்கும் உரிய உதிரிப் பாகங்கள் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் இல்லாத காரணத்தினால் அவை தற்போது செயலிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த சொகுசு பேருந்துகளை உற்பத்தி செய்யும் சீனாவின் ஃபோட்டொன் (Foton) மோட்டார் நிறுவனத்திடமிருந்து உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட 49 சொகுசுப்பேருந்துகள் செயலிழப்பு | 49 Luxury Buses Imported For Chogm 2013 Now Idle

இதேவேளை இலங்கையில் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே இருப்பதால், பழுதுபார்க்கும் பணியை விரைவுபடுத்த நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஒன்றைக் கோரியுள்ளதாகவும் லலித் அல்விஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் சீனாவிற்கு சென்றிருந்த போது ஃபோட்டொன் (Foton) நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, இலகுவான கட்டண முறையில் பேருந்துகளை இறக்குமதி செய்யும் கோரிக்கையினையும் முன்வைத்திருந்தார்.இந்தக் கோரிக்கையினை நிறுவன இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

No comments