Vettri

Breaking News

இரண்டாம் குறுக்கு தெருவில் தீ விபத்து : 15 பேர் மருத்துவமனையில்





 இன்று (27) காலை கொழும்பு கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

06 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 09.30 மணியளவில் இரண்டாவது குறுக்குத் தெருவில் ஆடையகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளதுடன், பல கடைகள் தீயில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments