Vettri

Breaking News

சுற்றுலாத்துறை வருமானம் 1.45 பில்லியன் டொலரை தாண்டியது!!





 இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் சுற்றுலாத்துறை வருமானம் 1.45 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகளவான சுற்றுலாப் பயணிகள், இவ்வாண்டே நாட்டிற்கு வருகை தருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

No comments