பலவந்தமாக 1,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற இரு பொலிஸார் பணி இடைநிறுத்தம்!
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக குறித்த நபரிடமிருந்து 1, 000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றார்கள் எனக் கூறப்படும் கந்தளாய் தலைமையகப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்டு இந்த இரண்டு அதிகாரிகளையும் பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.
கடந்த 8ஆம் திகதி கந்தளாய் தபால் நிலையத்துக்கு அருகில் ஒருவரை சோதனையிட்ட போது அவரிடம் மோட்டார் சைக்கிள் செலுத்துவதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் குறித்த நபரிடமிருந்து பலவந்தமாக ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments