வாகன உரிமையாளர்களுக்கான விசேட அறிவித்தல்..
நாளை மறுதினம் மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை, சபரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து, வாகன வருமான வரி அனுமதிப்பத்திர கருமபீடங்களும், மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரகமுவ மாகாண பிரதம செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபராதம் அறவிடப்பட மாட்டாது
இதன்படி, நாளை முதல் எதிர்வரும் ஒக்டோர் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் காலாவதியாகும் வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களுக்கு, எதிர்வரும் 9ஆம் திகதி வரை அபராதம் அறவிடப்படமாட்டாது என சபரகமுவ மாகாண பிரதம செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
No comments