பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை அதிகரிக்க திட்டம்
பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிக்கும் பயணிகளிடம் சோதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசேடமாக மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களில் விசேட பயணச்சீட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக ரயில் பயணிகளின் பயணச்சீட்டு சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிக்கும் பயணிகள் அதிகரித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை மருதானை புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு பெறாமல் பயணித்த 72 பயணிகளிடமிருந்து கிட்டத்தட்ட 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments