சிறிலங்காவில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் நிலை
சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறவேண்டிய அடுத்தகட்ட தவணை நிதிக்கான உடன்பாட்டை எட்டத்தவறியதால் ஏற்பட்ட பின்னடைவு நிலைமை சர்வதேச ஊடகங்களால் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இரண்டாம் கட்ட தவணையான 330 மில்லியன் டொலர் நிதியை விடுவிப்பது தொடர்பாக இரண்டு தரப்புக்கும் இடையில் விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படாமல் விட்டால் பொருளாதார நெருக்கடியால் கடந்த வருடம் எழுந்த மக்கள் போராட்டங்களைப் போன்ற போராட்டங்கள் மீண்டும் வெடிக்கலாம் என்ற அச்சநிலையும் எழுந்துள்ளது.
பின்னடைவுக்காக காரணம்இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்த நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்காக வடிவமைக்கப்பட்ட 3 பில்லியன் டொலர் கடன் திட்டம் பின்னடைவுக்கு உள்ளானதாக கருதப்படுகிறது.
அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாம் கட்ட தவணை நிதியை பெறுவதற்குரிய உடன்பாடு ஒன்றை சிறிலங்கா அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் எட்டத் தவறியமை அனைத்துலக ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய உடன்பாடு ஒன்று எட்டப்படும் வரை இலங்கைக்குரிய அடுத்த கட்ட தவணை நிதிகிட்டாது என்பதால் மீண்டும் நாட்டில் தீவிரமான பிரச்சினைகள் தலையெடுக்கலாம் என்ற அச்ச நிலை எழுந்துள்ளது.
எதிர்பார்த்ததை விட அதிக நேரம்இந்த நிலையில் திட்டமிடப்பட்ட சில சீர்திருத்தங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுக்கப்படுவதை சிறிலங்காவின் நிதியமைச்சக அதிகாரிகள் நாணய நிதியத்திடம் ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியால் எழுந்த மக்கள் போராட்டங்களால் அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments