வட்ஸ்அப் மூலம் திருமணமான பெண்ணுடன் தொடர்பு :இளைஞனின் உயிர்பறிபோனது
ஹொரபே மற்றும் எடரமுல்லைக்கு இடைப்பட்ட தொடருந்து பாதையில் பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக ராகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹோரேப் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி 100 மீற்றர் தொலைவில் தொடருந்து பாதையில் சடலம் கிடப்பதாகவும் குறித்த சடலத்தில் ஒரு கை பிரிக்கப்பட்டு காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இறந்தவரின் கைப்பை மற்றும் கைபேசியும் காணப்பட்டதுடன் கைப்பையில் இன்று காலை அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்பட்ட தொடருந்தின் பயணச்சீட்டும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இராஜகிரி, நாவல, பாடசாலை மாவத்தையைச் சேர்ந்த 59 வயதான ஹவேரிஸ் சித்ராங்கனி டயஸ் அபேசிங்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ராகம காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், தனியார் சட்ட நிறுவனம் ஒன்றில் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக ராகம காவல்துறையினர் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments