ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாம் நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாம் நாள் போட்டியில் இந்தியா மறு்றும் நேபாள அணிகள் மோதின.
நேற்று (04) கண்டி - பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றது. இதற்கமைய இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நேபாள அணிசார்பில், அதிகபடியாக ஆசிப் ஷேக் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
145 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
பந்துவீச்சில் இந்திய அணியின் ரவிந்திர ஜடேஜா 40 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 231 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. இந்திய அணி 17 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டதால், போட்டி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பின்னர் டக்வத் லூயிஸ் முறைமைக்கு அமைய போட்டி 23 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி, இந்திய அணிக்கு 145 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சூப்பர் 4 சுற்றுக்கு
இந்திய அணி 20.1 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணிசார்பில், அதிகபடியாக ரோஹித் சர்மா 74 ஓட்டங்களையும், சுப்மன் கில் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
No comments