Vettri

Breaking News

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்றுவீதம்..




 இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதிகள் வெளியாகியுள்ளன.

அதன்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (25) இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாக காணப்படுகின்றது.

அதனடிப்படையில் மக்கள் வங்கியில்அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.91 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  330.13 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

கொள்முதல் பெறுமதி

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.20 ரூபாயிலிருந்து  318.18, ரூபாயாக அதிகரித்துள்ள வேளை, விற்பனைப் பெறுமதி 328.50 ரூபாயாக மாறாமலுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்றுவீதம் | Dollar Rate Banks Today Exchange Rate

அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 318 ரூபாய் மற்றும் 328 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments