Vettri

Breaking News

கிளிநொச்சியில் பயங்கரம் : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல்




 கிளிநொச்சியில் நேற்று(27) வெளிநாட்டு பிரஜையின் வீட்டிற்குள் நுழைந்த குழுவொன்று நடத்திய தாக்குதலில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சி - திருவையாறு பகுதியில் நேற்று(27) நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை இந்த குழுவினர் தாக்கிய போது சம்பவத்தை அவதானித்த தாக்குதலுக்குள்ளான வீட்டிலுள்ள ஒருவர் தனது நண்பன் தாக்கப்படுவதாக கூறி அப்பகுதிக்கு சென்றுள்ளார்.

வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல்

இந்நிலையில், குறித்த குழுவினர் இளைஞனின் கால் பகுதியில் வெட்டியதாகவும், இதனைத் தடுத்த பெண்ணையும் தாக்கியதாகவும் காவலதுறையினருக்க அளித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பயங்கரம் : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் | Terror In Kilinochchi Attack At Midnight Into Home

இதேவேளை தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு 20இற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட ஒரு குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து அவ்வீட்டில் இருந்த முதியவர்களான கணவன், மனைவி இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோல் குண்டு வீசப்பட்டது

அத்துடன் வீட்டில் இருந்த சிசிரீவி , மின்விளக்குகள், பிரதான வாயில் என்பவற்றை தாக்கி சேதப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிளையும் சேதமாக்கிய பின் அதனை எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் பயங்கரம் : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் | Terror In Kilinochchi Attack At Midnight Into Home

இதேவேளை தாக்குதலின் போது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நான்கு பேர் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தாக்குதல் குழுவைச் சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டு பிரஜை கடந்த சில நாட்களுக்க முன்னர் பெல்ஜியம் நாட்டிலிருந்து தனது வீட்டுக்கு விடுமுறையில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் சந்தேகம் 

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் பயங்கரம் : நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல் | Terror In Kilinochchi Attack At Midnight Into Home

இதேவேளை குறிப்பிட்ட சந்தேக நபர்களில் பலர் கடந்த காலங்களில் வெவ்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இரணைமடு குளத்தின் கீழ் இடம்பெறுகின்ற சட்டவிரோத மண்ணகழ்வைத் தடுப்பதற்கு குறித்த குடும்பம் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் தாக்குதல் மேற்கொண்ட குறித்த குழுவில் மண் மாபியாக்களே அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தற்போது குறித்த மணல் அகழ்வு முற்றாக தடுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவமானது பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

No comments